காலை முதலே வேகமாக தளர்ந்து வரும் கருணாநிதியின் உடல் நிலை.. 24 மணி நேர கெடுவின் பின்னணி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது அவரது உறுப்புகள் செயலிழந்து இருக்கிறது.
இன்று காலை அவருக்கு உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. அவருக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி இருந்தது
இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திடீர் பிரச்சனை
இந்த நிலையில்தான் கருணாநிதியின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முறைகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று அவரது உடலில் திடீர் என்று நலிவு ஏற்பட்டு இருக்கிறது.

உறுப்புகள் செயலிழந்தது
இந்த நிலையில் இன்று மாலை அவரது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவரது உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து இருக்கிறது. முக்கியமாக கால் மற்றும் கைகள் செயலிழந்து இருக்கிறது. அதேபோல் உடலில் மற்ற உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து இருக்கிறது.

சவால்
அதேபோல் அவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பெரிய அளவில் தற்போது பயனளிக்கவில்லை. இதனால்தான் 24 மணி நேர கெடுவை டாக்டர்கள் விதித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் அவரது உடல் நிலை செயல்படுவதைப் பொறுத்தே அவரது உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications