காலம் மாறிப் போச்சு... கூகுளும் கலர்புல்லா ஆகிப் போச்சு- இனி ”ஈசியா தேடலாம்” லோகோ அறிமுகம்!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அதென்னவோ செப்டம்பர் அல்லது மே மாதங்களில்தான் கூகுள் தன் லோகோவினை மாற்றுகின்றது. அந்த விதத்தில் மே 2010, செப்டம்பர் 2013க்கு அடுத்தபடியாக இந்த செப்டம்பரில் தன்னுடைய "கூகுள் டாட்" லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
கடந்த 17 வருடங்களாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ள தேடுதல் பொறியான கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
முன்பெல்லாம் டெஸ்க்டாப் கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது பல அப்ளிகேஷன்கள் மற்றும் நவீன சாதனங்களில் உபயோகப்படுத்த முடிகிறது.

இனி சின்ன சின்ன வசதிகளிலும் கூகுள்:
இதன் அடிப்படையில் கூகுளின் புதிய லோகோ மிகச் சிறிய ஸ்க்ரீனில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் காட்டுகிறது. கூகுள் அனைத்து சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்துவதன் மூலம் இன்னும் எளிதாக கூகுள் செய்ய முடியும். அதாவது உங்கள் தேடுதலை விரிவாக்க முடியும்.

சேவை புரியும் கூகுள்:
இது, நீங்கள் கூகுளைப் பயன்படுத்துவது பற்றி மட்டும் குறிப்பிடாமல் கூகுள் உங்களுக்கு சேவை புரிகிறது என்பதையும் காட்டுகிறது.

கலர்புல்லாய் ஒரு ஜி:
உதாரணத்திற்கு, கூகுளின் வண்ணமயமான மைக் இன்னும் எளிதாக ஆடியோ வசதிகளை செய்து தரும். மேலும், பழைய சின்னத்தில் உள்ள சிறிய நீல நிற ஜியை நீக்கிவிட்டு, நான்கு வண்ணங்களில் கலர்புல் ஜி யை ரெயின்போ நிறத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள்.

எதிர்காலத்தைக் காட்டும் கூகுள்:
"இந்த கலர்புல் மாற்றம் இன்றை மட்டும் அல்ல... எதிர்காலத்தையும் இது காட்டுகிறது" என்கிறது கூகுள் நிறுவனம். அது மட்டுமல்ல அறிமுகமும் அழகாக டூடுள் இட்டு செய்துள்ளது கூகுள். ஒரு கை அழகாக பழைய லோவை துடைத்து விட்டு, கிரேயானில் புதிய லோகோவை எழுதுகின்றது.

சுற்றிச் சுழலும் புள்ளிகள்:
புதிய மெல்லிய கூகுள் லோகோ சுற்றிச் சுழன்று புள்ளிகளாக வண்ணமயமான ஜியினை காட்டுகின்றது. இதன் மூலம் உங்கள் தேடுதல் இன்னும் மேம்பட்டுள்ளது என்று அழகாக, வண்ணக்கலவையாக தெரிவித்துள்ளது கூகுள்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
"ஏதோ மிக மோசமான ஒன்று நடக்கப்போகிறது.." திடீரென இணையத்தில் டிரெண்டாகும் சம்பவம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications