பெரியார் சிலை மீது ஷூ வீசிய பாஜக வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. நெக்ஸ்ட் எச்.ராஜா?
Recommended Video

சென்னை: பெரியார் சிலை மீது ஷூ வீசிய வழக்கில், வழக்கறிஞர் ஜெகதீஷன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தந்தை பெரியாரின் 140ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தபோது பைக்கில் அங்கு வந்த வழக்கறிஞர் ஜெகதீஷன் என்பவர் பெரியார் சிலை மீது ஷூக்களை வீசிவிட்டு தப்பியோடினார்.

அடி உதை
இருப்பினும் அவரை மடக்கிப்பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஜெகதீசனை அடித்து உதைத்தனர். அப்போது போலீசார் அவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

பாஜக வக்கீல்
போலீஸ் விசாரணையில் வழக்கறிஞர் ஜெகதீஷன் பாஜககவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனிடையே, தற்போது வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சிலை அவமதிப்பு
கைது செய்யப்பட்ட இரு நாட்களிலேயே ஜெகதீஷன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம், சிலை அவமதிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற மெசேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜா கருத்து
ஆனால் பெரியார் சிலைகளை உடைப்போம் என கூறிவிட்டு அந்த ட்வீட் தனது அட்மினால் வெளியிடப்பட்டது என்று பாஜக எச்.ராஜா முன்பு கூறியிருந்தார். அதேபோல ஹைகோர்ட் குறித்து அவமரியாதை கருத்தை கூறிவிட்டு வாய்ஸ் டப் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆனால் இவர் மீது அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications