கிசுகிசு உடல்நலத்துக்கு நல்லது: சொல்லுது ஆக்ஸ்போர்டு ஆய்வு
சென்னை: செய்தித்தாள்களில், வார இதழ்களில் வரும் கிசுகிசுக்களை படிப்பது என்றாலே ஒரு அலாதி சுகம்தான். அதை வைத்து ஒரு ஆராய்ச்சியே நடத்துவார்கள். பள்ளிகளில் பாடம் நடத்து ஆசிரியர்கள் கூட ‘பசுநேசன்' யார் தெரியுமா என்று கேட்டு மாணவர்களிடம் பதிலை பெறுவார்கள். இன்றைக்கு நம்பர் நாயகிகள் பலர் இருந்தாலும் மூணுஷாவிற்குத்தான் மவுசு அதிகம் என்கிறது சினிமா கிசுகிசு.
ஊடகங்களில் மட்டுமல்ல பெண்கள் பலரும் ஒன்று கூடி வம்பளப்பார்கள் பாருங்கள், ஊடக கிசுகிசுக்கள் எல்லாம் அவர்கள் முன் நிற்கமுடியாமல் ஓடிப்போகவேண்டும். ஆனால் இப்படி கிசுகிசு பேசுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
இன்னொருவரைப் பற்றி கோள் மூட்டும் கிசுகிசுதான், உங்களை மனிதராக்குகிறது. மேலும் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழவும் அது உதவலாம் என்று தெரிவித்துள்ளனர் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

கிசுகிசுவினால் நன்மை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம உளவியல் துறை பேராசிரியராக பணியாற்றும் ராபின், கிசுகிசுக்கள்தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.
படிப்பினை தரும் கிசுகிசு
சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு கிசுகிசுக்கள், கோள் மூட்டல்கள் மற்றும் வம்பு பேச்சுகளால் நண்பர்கள் யாரை நாம் நம்புவது? என்று கற்றுக்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வளரும் தகவல் தொடர்பு
கிசுகிசுக்களால் மனிதனின் மொழிவளம் வளர்ந்திருப்பதாகவும், தகவல் தொடர்பு வளர்ந்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் ஆரோக்கியம்
பெண்களை வம்புப்பிரியர்கள் என்பார்கள். யாரைப்பற்றியாவது எதைப்பற்றியாவது தன் தோழிகளுடன் கிசுகிசுத்துக்கொண்டே இருப்பார்கள். இப்படி பேசுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மிக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மன அழுத்தம் குறையும்
இதன்மூலம் பெண்களுக்கு உற்சாகம் அதிகரிக்கிறதாம். அவர்களின் புரஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவு சுரப்பு அதிகப்பதோடு மன அழுத்தம் குறைகிறதாம்.
பெண்களுக்கான பாலின ஹார்மோன் புரோஜெஸ்டிரோன்தான் மாதவிலக்கை நெறிப்படுத்துகிறது. பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு உதவும், இது ஒரு பெண் தாயாக மாறுவதற்கு காரணமாகிறது.
சமீபத்தில் 160 பெண்களின் உமிழ்நீரை எடுத்து அவர்களின் புரோஜெஸ்டிரோன் உற்பத்தி அளவு பரிசோதிக்கப்பட்டது. அவர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன் மூலம்
இதனையடுத்து பெண்களின் ஹார்மோன் அளவு பரிசோதிக்கப்பட்டது. கேள்விக்கு பதில் கூறி பேசிய பெண்களின் ஹார்மோன் அளவு உயர்ந்திருந்தது ஆய்வில் தெரியவந்தது.
ஒருவருடன் ஒருவர் உரையாடுவது, அவர்களின் உடல்நலனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications