ஓடும் பேருந்தில் மாரடைப்பு.. பஸ்சை நிறுத்தி 40 பயணிகளின் உயிரை காத்து உயிரிழந்த டிரைவர்!
கள்ளகுறிச்சி: சங்கராபுரம் அருகே தன் உயிரை துச்சமாக நினைத்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகில் வந்தபோது, பேருந்தின் ஒட்டுநர் பாண்டியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பதற்றத்திற்கு ஆளாயினர்.

இதனையடுத்து தனது உயிரைப் பொருட்படுத்தாத, பேருந்து ஒட்டுநர் பாண்டியன், பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி பேருந்தில் இருந்த 40 பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார். சிறிது நேரத்தில் பாண்டியனின் உயிர் பிரிந்தது.

பின்னர் பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாண்டியனின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர்.

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோதும், பேருந்திலிருந்த 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த ஓட்டுநர் பாண்டியனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications