செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி
செய்யாறு அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதி விபத்து கணவன் மனைவி பலி
திருவண்ணாமலை: செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35), அவரது மனைவி நதியா (30) இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்கு பத்திரிகை அச்சடிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை செய்யாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர், செய்யாறில் இருந்து தங்களுடைய் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை கிராமம் அருகே, செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைகளின் காதணி விழாவுக்கு பத்திரிகை அச்சடிக்க சென்ற கணவன் மனைவி பேருந்து மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications