அச்சம் என்பது மடமையடா… எம்.ஜி.ஆர் படலை உற்சாகமாக பாடிய ஸ்டாலின்
ஆரணி: அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா.... என்று எம்.ஜி.ஆர் பாடிய பாடலைப் பாடி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின்
ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.சிவானந்தத்தை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:
கும்பிடு போடுங்க...
ஜெயலலிதா இறங்கும் இடத்தில் ஹெலிபேடு அமைக்க ரூ.30 லட்சம் வரை செலவு செய்கிறார்கள். நாம வணக்கம் வச்சா கம்பீரமா இருக்கும். ஆனா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கீழே படுத்துக்கொண்டு வணக்கம் வைக்கின்றனர். இல்லைன்னா மேலே பார்த்து சூரிய வணக்கம் போல கும்பிடு போடுகின்றனர்.
குட்டிச்சுவர் ஆட்சி
நம்முடைய பண்பாட்டை குட்டிச்சுவராக்கும் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஜெயலிதாவுக்கு குடிநீர் வழங்குவதில் அக்கறை இல்லை. குடிநீரை விற்கிறார். அதிலும் அவரது படம் போட்டு அம்மா தண்ணீர் எனும் பெயரில் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தாய்பாலை விற்பார்களா?
உலகத்தில் வேறு எந்த இடத்திலும் குடிநீரை விற்கும் கேடு கெட்ட நிலை தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. தாய்ப்பாலை யாராவது விற்பார்களா?. தண்ணீரை விற்கும் கொடுமை தமிழகத்தில்தான் நடக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு
திமுக கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுல் இஸ்லாமியர்களை திமுக நிறுத்தியிருக்கிறது. கூட்டணி ஆட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதியும், மயிலாடுதுறை தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதன் மூலம் 10 சதவீத இடங்களில் இஸ்லாமியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியருக்கு வாய்ப்பில்லை
அதிமுக 40 தொகுதிகளில் நிற்கிறது. அதில் ஒரு தொகுதி மட்டுமே இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதவெறி பிடித்த பாஜக கூட்டணியில் களத்தில் நிற்க ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிற்க வாய்ப்பில்லை.
சிறுபான்மையினருக்கு தீங்கு
சிறுபான்மை சமுதாயத்தில் விரோதிகளாக, துரோகிகளாக இருப்பவர்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்கின்றனர். அதனால் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தீங்கு ஏற்படும்.
பாடம் புகட்டுங்கள்
ராமருக்கு கோயில் கட்டுவோம என்கிறார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமருக்கு கோயில் கட்டக்கூடாது என்று முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் ராமர் கோயில் கட்டுவதற்கு முதலில் ஆதரவு குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. எனவே இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
நானும் பாடுவேன்
ஜெயலலிதா தன்னுடைய பிரசார கூட்டத்தில் அச்சம் என்பது மடமையடா... என்ற பாடலை வாசித்து முடிக்கிறார். இது கண்ணதாசன் எழுதி, டி.எம்.சவுந்தரராஜன் பாட எம்.ஜி.ஆர் வாயசைத்தார். நானும் அதைப் பாடுவேன் என்று கூறி உற்சாகமாக எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications