ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்.. சசிகலா முதல்வராகும் வரை பதவியில் நீடிப்பார்!
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார்.
சென்னை: சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவர் இறந்த அதே மாதத்திலேயே சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஒரு மாதத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த முடிவை முன்மொழித்த ஓ. பன்னீர்செல்வம், தன்னுடைய முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இந்தக் கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

மேலும், அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிக்கலாம் என்று கவர்னர் தெரிவித்துள்ளார். சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகல் கவர்னருக்கு அளிக்கப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications