அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்? ஆளுநர் சொல்லும் விளக்கத்தை பாருங்க!
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை: அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆளுநரின் இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து. ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.

இன்றும் ஆய்வு செய்த ஆளுநர்
இந்நிலையில் கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் ஆய்வு செய்தார்.

வணக்கம் கூறிய ஆளுநர்
கோவையில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில், தமிழில் வணக்கம் கூறி, தனது உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கோவைக்கு வந்தது மகிழ்ச்சி
தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் ஆளுநர் கூறினார்.

அரசுக்கு பாராட்டு
ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் பாராட்டினார்.

அப்போதானே பாராட்ட முடியும்
மேலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும் என்று கூறி ஆய்வு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆளுநர். நேரில் சென்று ஆய்வு நடத்தியதால் தான் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் தூய்மையாக இருப்பது தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.

சர்ச்சை எழுந்த நிலையில் விளக்கம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை தாம் பாராட்டுவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் கூறினார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை ஆய்வு என சர்ச்சைகள் வரிசைக் கட்டிய நிலையில் எதற்காக ஆய்வு என ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்துள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications