மோடிக்கு பூ கொடுத்த ஓபிஎஸ், பொன்னாடையும் போர்த்திய எடப்பாடி
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்பான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர்நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவப்பு நிற சால்வை அணவித்து புத்தகத்தையும், இரண்டு ரோஜா பூங்கொத்துகளையும் கொடுத்து கைகுலுக்கி வரவேற்றார்.
அடுத்தபடியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அன்பளிப்பை பரிசளித்து இரண்டு பூங்கொத்துகளை கொடுத்து புன்னகைத்தவாரே கைகுலுக்கினார். இவர்களையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் இரட்டை ரோஜாக்களுடன் அன்பளிப்பாக புத்தகத்தையும் அளித்தனர். இதே போன்று எம்பி மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரதமரை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications