அண்ணா பல்கலை. துணை வேந்தர் நியமனம்.. ஆர்.எம். லோதா தலைமையில் புதிய குழு.. ஆளுநர் அதிரடி உத்தரவு
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய குழுவை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களிலும் நீண்ட காலமாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால், உயர்கல்வித் துறை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் அந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகளை தற்காலிகமாக கவனித்து வந்தது.

இதற்கிடையில், இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்களும் பெயர் பட்டியலை ஆளுநரிடம் வழங்கின. இதனைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மட்டும் துணை வேந்தர் தேர்வு செய்யப்பட வில்லை.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்துள்ளார். இக்குழு புதிய துணைவேந்தருக்கு 3 பேரை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு ஆளுநருக்கு அனுப்பிய பட்டியலில், மோகன், கருணாமூர்த்தி, எபினேசர் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இப்பட்டியலை கவர்னர் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications