விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் ஆளுநர்.. அறிக்கை தர உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள்.

உமா பணியிடை நீக்கம்
2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக அப்போதைய தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியை உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதிர்வலைகள்
அண்ணா பல்கலைக்கழத்தின் மீது எழுந்த இந்த ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது.

துணைவேந்தருக்கு உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது எழுந்த இந்த ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது.

தனிக்குழு தீவிர விசாரணை
ஆளுநர் உத்தரவை அடுத்து அண்ணா பல்கலைக்கழக தனிக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதனால் மேலும் பல பேராசிரியர்களும் அலுவலர்களும் கையும் களவுமாக சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications