ஆளுநர் ரவி இன்னும் மாறவில்லை.. அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார்.. ஸ்டாலின் பரபர!
தஞ்சாவூர்: "உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை. தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி 40 நாட்களாக ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை" என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித் துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார் ஆளுநர் ரவி என சாடியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தஞ்சையில் தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வீரவிஜயன் தனுஸ்ரீ இணையர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது திமுகதான். தஞ்சையையும், கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது; காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன்.
மாமன்னன் ராஜராஜன் ஆட்சி செய்த இந்த மண்ணில் சுவாசிக்கும் போதே கம்பீரமாக உணர்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன். அந்தவகையில் 82.75 லட்சம் குறுவை தொகுப்பு திட்டம் இந்தாண்டு அறிவிக்கிறேன். 56000 விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 36 மாவட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்." என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை. தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி 40 நாட்களாக ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை.
சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். ஆளுநரால் கும்பகோணம் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா தாமதமாகிறது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications