கருணாநிதி பெயர் இடம் பெற்றதால் நிறுத்தி வைக்கப்பட்ட 2 லட்சம் + 1 பொருளியல் பாடப் புத்தகம்
சென்னை: தமிழக அரசின் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பொருளியல் பாட நூல்களின் முகவரையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றதால் அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த செயலால் மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்காத சூழ்நிலை எழுந்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகமானது. தற்போது தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வித் திட்டமே அமலில் உள்ளது.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் உள்ளது. இருப்பினும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பழைய பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.
தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளின் பொருளியில் பாடத்துக்கான முகவரை பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதாவது அதில் முதல்வர் கருணாநிதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி என்று அப்போதைய பாடத் திட்டக் குழுத் தலைவர் நாகநாதன் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். இது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.
இது தற்போது அரசின் கவனத்திற்குப் போயுள்ளது. இதையடுத்து புத்தகங்களை விநியோகிக்காமல் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை. முகவரியை மாற்றி விட்டு அல்லது நீக்க விட்டு புத்தகங்களை விநியோகிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனராம்.
மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தனையும் தற்போது அரசின் முடிவுக்காக காத்துள்ளது. மாணவர்களும் புத்தகத்தின் வருகைக்காக காத்துள்ளனர்.
கலைஞர் பெயர் இருப்பதால் 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் முடக்கம்: புதிதாக அச்சிடப்படும் வரை அரசு எந்திரம் உறங்கிக் கொண்டிருந்ததா?
— Dr S RAMADOSS (@drramadoss) June 18, 2015 இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்ததா?
இந்த நிலையில் இந்த குழப்பம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கலைஞர் பெயர் இருப்பதால் 11ம் வகுப்பு புத்தகங்கள் முடக்கம்: புதிதாக அச்சிடப்படும் வரை அரசு இயந்திரம் உறங்கிக் கொண்டிருந்ததா? என்று கேட்டுள்ளார் அவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications