கமல்ஹாசனின் "ஆஸ்கர்" பெருமையில் கெளதமிக்கு "2" பங்குண்டு!

கமல்ஹாசனின் 5 படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் தேவர் மகன் மற்றும் குருதிப்புனல் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கெளதமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் அதிக அளவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்ற பெருமை கமல்ஹாசனின் படங்களுக்கு மட்டுமே உண்டு. அந்தப் பெருமையில் இரண்டு முறை பங்கெடுத்த பெருமை கெளதமிக்கும் உண்டு.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கெளதமி, கமல்ஹாசனை விட்டுப் பிரி்ந்துள்ளார். கமல்ஹாசனும், கெளதமியும் இணைந்து நடித்த படங்களிலும் இருவரின் நடிப்பும் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

அதேசமயம், விருதுகளைத் தட்டிச் செல்லவும் தவறியதில்லை. குறிப்பாக ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கமல் படங்களில் கெளதமியின் முத்திரயைம் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன்

ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன்

ஆஸ்கர் விருதை இதுவரை வெல்லாவிட்டாலும் கூட ஆஸ்கர் நாயகன் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு. காரணம், அதிக அளவிலான முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது கமல் படங்கள்தான்.

5 முறை ஆஸ்கருக்கு

5 முறை ஆஸ்கருக்கு

கமல்ஹாசனுடைய படங்கள் ஐந்து முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் எதுவுமே விருது பெற்றதில்லை. இருப்பினும் அதிக அளவில் ஆஸ்கருக்கு பரி்ந்துரைக்கப்பட்ட நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு மட்டுமே உண்டு.

எந்தெந்த படங்கள்

எந்தெந்த படங்கள்

நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம் ஆகிய கமல் படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவை. இதில் இரண்டு படங்களில் கமலுக்கு நாயகி கெளதமி என்பது சுவாரஸ்யமானது.

2 படங்களில் கெளதமி

2 படங்களில் கெளதமி

தேவர் மகனில் முதல் பாதியில் கெளதமி நாயகியாக நடித்திருப்பார்.அடுத்த பாதியில் ரேவதி வருவார். இதில் ரேவதியின் நடிப்பு காவியம் என்றால் கெளதமியின் நடிப்பு கவிதையாக அமைந்திருக்கும். கிளாமர் நடிகையாக பார்க்கப்பட்ட கெளதமியை இதில் அழகான நடிகையாக காட்டியிருப்பார் கமல்.

குருதிப்புனல்

குருதிப்புனல்

நடிப்பில் கெளதமி முத்திரை பதித்த படம் குருதிப்புனல். குறிப்பாக நாசரிடம் சிக்கிக் கொள்ளும் காட்சியில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. பெரிய அளவில் பேசப்பட்டது. அவருக்குப் பெயர் வாங்கிக கொடுத்த முக்கியப் படம் குருதிப்புனல்.

கமலில் பாதி

கமலில் பாதி

கமல்ஹாசனின் 5 ஆஸ்கர் படங்களில் இரண்டில் கெளதமியின் பங்கும் இருந்தது என்பது கமல்ஹாசனில் பாதி கெளதமி என்பதைச் சொல்லாமல் சொல்வதாக உள்ளது சுவாரஸ்யமான ஒரு ஆச்சரியம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+