''வழிதவறிய காதல்'': நண்பனை குத்திக் கொன்ற வாலிபர்.. ஆசிரியர் உள்பட 3 பேர் கைது!
போளூர்: வாலிபர் கொலை வழக்கில் ஒரு ஆசிரியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போளூர் பத்மாபாய் தெரு அண்ணாமலை மகன் கார்த்திகேயன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 27ம் தேதி மாலை போளூர் அடுத்த நரிக்குன்று முருகர் கோவில் அருகே நிலத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் துளசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.
குற்றவாளிகள்:
போளூர் சிவராஜ்நகர் எம்.பி.ஏ. பட்டதாரியான விவேக், செல்வம்பேட்டையை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் விக்ரம், பெருமாள் மகன் சிவா, போளூரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் விமல் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விவேக்கின் காதல்:
கொலை செய்யப்பட்ட கார்த்திகேயனும், விவேக்கும் நண்பர்கள். போளூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், விவேக்கும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அப்பெண் வேலை செய்த ஒரு தனியார் கம்பெனியில் கார்த்திகேயனும் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
தனிமை செய்த கொடுமை:
அப்போது தனிமையில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி விவேக்கின் காதலியிடம் கார்த்திகேயன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் 6 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
மாட்டிகொண்ட காதலி:
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்திகேயனும், அப்பெண்ணும் ஒரு இடத்தில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருப்பதை விவேக் பார்த்துள்ளார். இதையடுத்து காதலியின் செல்போனை விவேக் வாங்கி பார்த்தபோது அதில் கார்த்திகேயனும், அப்பெண்ணும் பலமுறை பேசியுள்ளது தெரியவந்தது. அப்போது கார்த்திகேயன் தன்னிடம் உறவு கொண்ட விஷயத்தை அவர் ஒப்புக் கொண்டார். இதனால் விவேக் கடும் ஆத்திரம் அடைந்தார்.
தீர்த்துக்கட்ட முடிவு:
இதனால் நண்பனை தீர்த்துக்கட்ட விவேக் முடிவு செய்தார். இதற்கிடையே கடந்த 25 ஆம் தேதி கார்த்திகேயனை சந்தித்து விவேக் பேசிய போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிம்கார்டை பறித்த விவேக்:
அப்போது கார்த்திகேயனின் செல்போனில் இருந்த சிம்கார்டை பறித்து கொண்டு விவேக் சென்று விட்டார். எனவே தனது சிம்கார்டை திருப்பித்தரும்படி கார்த்திகேயன் விவேக்கிடம் கேட்டுள்ளார்.
கொலை செய்ய திட்டம்:
இதற்கு கலாவும் சிபாரிசு செய்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விவேக் கடந்த 27 ஆம் தேதி மாலை சிம்கார்டு தருவதாக நைசாக பேசி நரிக்குன்று அருகே உள்ள இடத்துக்கு கார்த்திகேயனை அழைத்துச் சென்றார்.
உருட்டுக்கட்டை தாக்குதல்:
அங்கு இருவரும் மது அருந்தினர். சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு செல்வம்பேட்டையை சேர்ந்த விக்ரம், சிவா ஆகியோர் வந்துள்ளனர். இதன் பிறகு 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென விக்ரம், சிவா ஆகியோர் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையாமல் தாக்கினார்.
கத்தியால் குத்திய விவேக்:
அப்போது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விவேக் கார்த்திகேயனின் மார்பில் 7 முறை குத்தினார்.அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் உடன் இருந்த நண்பர்கள் விக்ரம், சிவா ஆகியோரும் கத்தியால் குத்தியுள்ளனர். மொத்தம் 21 இடங்களில் கார்த்திகேயனுக்கு கத்திக்குத்து விழுந்தது. பிறகு 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டன.
மறைத்த அண்ணன் விமல்:
வீட்டுக்கு சென்ற விவேக் தனது அண்ணன் விமலிடம் தெரிவித்து அழுதுள்ளார். அவர் கொலை சம்பவத்தை போலீசுக்கு தெரியாமல் மறைத்துவிட்டு விவேக்கை வேலூருக்கு அழைத்து சென்று ரயிலில் பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல்களை விசாரணையில் 3 பேரும் ஒப்புக் கொண்டனர்.
கோர்ட்டில் ஆஜர்:
கொலையை மறைத்த குற்றத்துக்காக உடற்கல்வி ஆசிரியர் விமலையும் போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications