நெல்லை கல்லூரியில் கிராமிய கலை விழிப்புணர்வு போட்டி
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் "கிராமியம்-2013' என்ற கலைப்போட்டிகள் நாளை (25ம் தேதி) துவங்குகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளிடையே கிராமிய கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிராமிய கலைகளை பாதுகாக்கும் வகையிலும் பாளை. சேவியர் கல்லூரியில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் "கிராமியம்' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்தாண்டு மீண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் நாளை (25ம் தேதி) துவங்குகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் போட்டியை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு துவக்கி வைக்கிறார்.
கிராமிய மனம் வீசும் வகையில் குழு நடனம், மாறுவேட போட்டி, கதை சொல்லல், குழு நடனம், குழு பாடல், குறு நாடகம் உட்பட 17 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள் 1-3 வகுப்பு, 4-5, 6-8, 9-10, 11-12 வகுப்பு என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.போட்டிகள் 26ம் தேதி மாலை வரை நடக்கிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
1-5ம் வகுப்பு வரை அதிக புள்ளிகள் பெறும் பள்ளிக்கு வானமாமலை சுழற்கேடயமும், 6-12 வகுப்பு வரை அதிக புள்ளிகள் பெறும் பள்ளிக்கு லூர்து சுழற்கேடயமும் பரிசாக வழங்கப்படும்.
பரிசளிப்பு விழாவில் கலைமனைகளின் அதிபர் டேனிஸ் பொன்னையா அடிகள், கல்லூரி செயலர் மைக்கேல் தாஸ் அடிகள், முதல்வர் கில்பர்ட் கமிலஸ் அடிகள் கலந்து கொள்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications