சகாயத்தின் செல்போன், தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு? மதுரையில் பரபரப்பு
சென்னை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளைப் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள சட்ட ஆணையர் சகாயத்தின் தொலைபேசிகள், செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தான் தங்கும் அறையையும், விசாரணை செய்யும் இடத்தையும் சகாயம் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரானைட் முறைகேடு விசாரணையை ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சட்ட ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்துள்ளது. இதன்படி, கடந்த இரு நாட்களாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

புதன்கிழமையன்று வேளாண்மை, பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்பு, கனிம வளம், வருவாய் துறை அலுவலர்களிடம் கிரானைட் குவாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் வியாழக்கிழமை பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார். கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட நிலங்கள், அழிக்கப்பட்ட நீராதாரங்கள் குறித்து பொதுமக்கள் பலரும் புகார் மனுக்களை அளித்தனர். 71 மனுக்கள் வரை பெறப்பட்டன. இன்றும் மனுக்களை பெற்று வருகிறார் சகாயம்.
இந்த நிலையில், நேற்றிரவு சகாயத்தின் உதவியாளருக்கு மர்ம தொலைபேசி ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் சகாயம் தங்கியிருக்கும் அறை மற்றும் அலுவலக அறையில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள் ரகசியமாக பதிவு செய்யப்படுவதாகவும், ஒட்டுகேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கிறார். அவருக்கு முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய தகவலை அடுத்து தங்கியிருக்கும் அறையை காலி செய்த அவர் தரை தளத்தில் உள்ள அறைக்கு வந்துவிட்டார்.
அதே போல, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் இருக்கும் வணிக வளாகத்தில் அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் வெள்ளிக்கிழமை காலை ஒட்டுக் கேட்பு சாதனங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் அத்தகைய சாதனங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. சோதனைக்குப் பின்னரே பொதுமக்களும், செய்தியாளர்களும் இன்று அனுமதிக்கப்பட்டனர்.
கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமாகியுள்ள நிலையில், அவரது விசாரணை விவரங்கள் ஒட்டுக் கேட்பதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications