மாணவர்களே வரவில்லை.. முதல்வர் படித்த + பங்கேற்ற பள்ளி ஆண்டு விழாவில் சர்ச்சை!
பள்ளி மாணவர்கள் இல்லாமல் முதலமைச்சர் பங்கேற்ற ஆண்டு விழா நடைபெற்றது.
Recommended Video

ஈரோடு: தாம் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்புவிழா, அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.

தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி 1967 ம் ஆண்டில் 6 ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி பேசும்போது, தாம் பள்ளியில் படித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியதை மறக்க முடியாது என்று தெரிவித்த அவர் தனது விளையாட்டு ஆசிரியரின் முயற்சியால்தான் இந்த அளவிற்கு உயர்ந்ததாக தெரிவித்தார்.

மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றுவதாக அறிவித்தார். தாம் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

நலத்திட்ட உதவி பெற வந்தவர்களும், அரசு அதிகாரிகளும்,ஆளும் கட்சியினரும் மைதானத்தை நிரப்பியிருந்தாலும் மாணவர்கள் இல்லாமல் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் எவ்வாறு முழுமையடையும் என்பதுதான் பொதுமக்களின் கேள்வி. தாம் படித்த பள்ளியில் முதல்வர் பங்கேற்ற விழா நடைபெறும் நேரத்தில் குறிப்பிட்ட மாணவர்களையாவது அதில் பங்கேற்க செய்திருக்க வேண்டும். விழா நடத்தியவர்கள் மறந்தது ஏனோ காரணம் தெரியவில்லை. ஒருவேளை அம்மாவின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சியில் இப்படித்தானோ??
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications