ரெடியாகும் புதிய ஏஎன்பிஆர் கேமரா.. சென்னை போக்குவரத்து போலீசார் மெகா திட்டம்.. என்ன நடக்கும்?
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை மீறி வாகனம் ஓட்டுவதை தடுக்க, சென்னை போக்குவரத்து காவல்துறை (ஜிசிடிபி), 25 ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை நகரில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்தார்.
தற்போது, சென்னையில் அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட 11 சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள இத்தகைய கேமராக்கள், விதிமீறல்களை தானாகவே கண்டறிந்து, வாகன உரிமையாளர்கள் பெயரில் இ-செல்லான்களை அனுப்பி வைக்கின்றன.

இது தவிர தினமும் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக இவர்கள் சுமார் 1,000 முதல் 1,200 வழக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னையில் முன்பை விட போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஒருவழிப்பாதையில் செல்வது, வாகனங்களில் அசுர வேகத்தில் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, சிக்னலை மீறி செல்வது போன்ற விதிமீறல்களை கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்,
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களை மீறி வாகனம் ஓட்டுவதை தடுக்க, சென்னை போக்குவரத்து காவல்துறை (ஜிசிடிபி), 25 ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்கள் நகரில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வழக்குகளை பதிவு செய்வதை மட்டும் வலியுறுத்தவில்லை. அவர்களை அபராதம் செலுத்த வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலுவையில் உள்ள அபராதம் வசூலிக்க அடிக்கடி சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது தவிர, நாங்கள் நகர் முழுவதும் 12 இடங்களில் அபராதம் செலுத்தும் மையங்களை வைத்திருக்கிறோம். அங்கிருந்து நாங்கள் மீறுபவர்கள் செய்பவர்களிடம் அபராதத்தை வசூலிக்கிறோம். அனைத்து விதிமீறல்களுக்கும் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை அவர்கள் செலுத்த வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. மேலும் போக்குவரத்து விதிமீறல்களை மீறுபவர்களை நாங்கள் மொத்த எஸ்எம்எஸ் மூலமாகவும் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றார்.
போக்குவரத்து மாற்றுப்பாதைகள் உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் மோசமடைவது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சரத்கர், நகரின் எந்த சாலையும் ஒருவழியாக மாற்றப்படும்போதெல்லாம், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அல்லது தொடர்புடைய ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவிக்கிறது. போக்குவரத்து மாற்றப்பட்ட இடத்தில், மாற்றுப்பாதைகள் குறித்து முறையான அறிவிப்பு பலகையை அமைக்கிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications