குரூப் – 2 தேர்விற்கான விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்-2 தேர்விற்கான சரியான விடைகள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று, குரூப்-2 "அ" பிரிவிற்கான தேர்வினை நடத்தியது. இதன் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள உதவியாளர், கணக்கர் போன்ற 2,846 பதவிகளுக்கான இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
இதற்காக மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் 2,217 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். விண்ணப்பம் செய்தவர்களில் சுமார் 2 லட்சத்து 8782 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில் குரூப் -2 "அ" எழுத்து தேர்வுக்கான விடைகள் தற்போது தேர்வர்களின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வருகிற 10 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சிக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேற்விற்கான முடிவுகள் 3 மாதகாலத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற குரூப்-2 தேர்விற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications