ஜிஎஸ்டி சந்தேகங்கள்... கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்- உதவி எண்கள் அறிவிப்பு
ஜிஎஸ்டி பற்றிய சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய கட்டணமில்லா தொலைபேசி 01204888999 மற்றும் வணிகவரித்துறையின் தொலைபேசி உதவி எண்18001036751 ல் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை: ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்களுக்கு எழும் சந்தேகங்களை 01204888999 மற்றும் 18001036751 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழக வணிகவரித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வணிகவரித்துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சனிக்கிழமை முதல் அமலாகிறது. தமிழக அரசின் வணிகவரிததுறை இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த வரி குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்தது.

இதில் வணிகர்கள் கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வரி விதிப்பு வட்டத்திலும், குறைந்த பட்சம் 2 கருத்தரங்குகள் என 650 கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அளவிலும் வணிகர்கள் சந்தேகங்களை போக்க கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஒவ்வொரு வணிக வரி வட்டத்திலும் உதவி மையம் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில், ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள சந்தேகங்களை வணிகர்கள் நிவர்த்தி செய்யலாம்.
மேலும், வணிகர்களுக்கு அவ்வபோது எழும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஜிஎஸ்டிஎன்-ல் நேரடியாக இணைக்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி 01204888999 மற்றும் வணிகவரித்துறையின் தொலைபேசி உதவி எண்18001036751 ல் தொடர்பு கொள்ளலாம்.
வணிக வரித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டிஎன் இணையதள மென்பொருள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை தொடரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது சுமூகமான முறையில் புதிய வரி முறைக்கு மாற ஒத்துழைப்பு அளிக்கும்படியும் வணிகர்களுக்கு உதவுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த வணிகர்களில், 91 சதவீதம் பேர் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவு மாற்றம் பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக ஜிஎஸ்டிஐஎன் (புரொவிஷனல் ஐடி) வழங்கப்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி 3 மாதங்கள் வரை தங்கு தடையின்றி வணிகம் செய்யலாம். மேலும், மத்திய ஜிஎஸ்டி துறை மூலமாக விரிவான ஏற்பாடுகளும் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications