400 அடி பதாகையில் திருக்குறள் அதிகாரங்கள்.. சென்னையில் உலக சாதனை!
சென்னை: சென்னையில் உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது.

133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள நெகிழிப் பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இம்முயற்சி இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகும். திருவள்ளுவர் நாளில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருக்குறளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ் மக்கள் வள்ளுவர் நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகள் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுதல் வேண்டும். திருவள்ளுவருக்கு தமிழில் நாணயங்கள் அஞ்சல் தலைகள் வெளியிட வேண்டும். பாராளுமன்றத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும்.

இந்திய அரசு திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த மொழி இன சமத்துவத்தை பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் வைத்தே இச்சாதனை முயற்சியை தமிழர் பண்பாட்டு நடுவமும், தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications