For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டில் நடந்த குடியரசுத் தின விழாவில் ஆதிக்கம் செலுத்திய குஜராத்.. ஆளுநர் ஏற்பாடு!

மெரினாவில் நடந்த குடியரசுத் தின விழாவில் குஜராத் பாரமப்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குடியரசு தினவிழா கொண்டாட்டம் | தமிழ்நாடு -வீடியோ

    சென்னை: நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதில் நடந்த அணி வகுப்பில் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இந்த நிலையில் இந்த விழாவில் குஜராத் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.

    தமிழக கலை

    தமிழக கலை

    இந்த விழாவில் தமிழக கலையான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் போன்றவை இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் பறை இசையும் இடம்பிடித்துள்ளது. தமிழக பள்ளி மாணவர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட குஜராத் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்துள்ளனர். நேரடியாக கடைசியில் இவர்கள் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தேர்வில் எந்த விதமான அடிப்படை முறைகளும் கடைபிடிக்கப்படவில்லை.

    பாரம்பரியம்

    பாரம்பரியம்

    இதில் அவர்கள் குஜராத் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் நடனம் ஆடியுள்ளார். அதேபோல் குஜராத்தில் இருந்து மற்ற கிராமிய கலைஞர்களும் வந்துள்ளனர். இவர்கள அனைவரும் தமிழ்ப்பல்கலைக்கழக அனுமதியின் பேரில் நேரடியாக உள்ளே நுழைக்கப்ட்டு இருக்கிறார்கள்.

    ஆளுநர்

    ஆளுநர்

    இந்த நிகழ்வு அனைத்திற்கும் ஆளுநர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் அதிகம் தலையிடுவதாக கூறப்பட்டது. தற்போது குடியரசுத் தின விழாவில் குஜராத் பாரம்பரியத்தை புகுத்தி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    India's 69th Republic day celebrates today. On the occasion of the Republic Day of Chennai, the governor Panvarilal Purohit is hoasiting flag at Gandhi statue. Gujarat culture has dominated over Tamil nadu culture in this Republic Day function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X