கள்ளத்துப்பாக்கி பிரச்சினை தேசத்தின் பிரச்சினை- நீதிபதிகள் கவலை

கள்ளத்துப்பாக்கி பிரச்சினை தமிழகத்தின் பிரச்சினை மட்டுமல்ல, அது தேசத்தின் பிரச்சினை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பதில் தர மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளத்துப்பாக்கி பிரச்சினை தேசத்தின் பிரச்சினை என்று கவலை தெரிவித்துள்ளனர்.

கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையை தடுக்க உத்தரவிட கோரி வழக்கறிஞர் கார்மேகம் தொடர்ந்த பொதுநல மனு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடத்தல் துப்பாக்கிகள்

கடத்தல் துப்பாக்கிகள்

கடந்த வாரம் குவஹாத்தியிலிருந்து கள்ளத்துப்பாக்கிகளை கடத்தி வந்த பிரதீப், கமல் என்ற இரண்டு இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கினர். சென்னை மற்றும் திருச்சியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 7 கள்ளத் துப்பாக்கிகள், கள்ள நோட்டுக்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். இதில் காவல்துறையினரே சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளத்துப்பாக்கி விற்பனை

கள்ளத்துப்பாக்கி விற்பனை

விசாரணையில் இவர்கள் துப்பாக்கி கடத்தி வந்ததற்கு திட்டம் உருவானதே புழல் சிறையில் தான் என போலீஸாருக்கு தெரியவந்தது. சிறிய செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட பிரதீப் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏற்கனவே கள்ளத்துப்பாக்கி விற்ற வழக்கில் கைதான ரபீக் என்பவரிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு

தேசிய புலனாய்வு அமைப்பு

பெரிய அளவில் வேலை செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடு என ரபீக் ஐடியா கொடுக்க என்ன செய்ய வேண்டும் என பிரதீப் கேட்டபோது கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை, கள்ள நோட்டுகள் மாற்றுவது என தனது தொழிலை ரபீக் இவர்கள் மூலம் தொடர்ந்தது தெரிய வந்தது.

புழல் சிறையில் அடைப்பு

புழல் சிறையில் அடைப்பு

ரபீக் 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முதலில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டவராவார். பின்னர் விடுதலையான ரபீக் கடந்த 2016ஆம் ஆண்டு கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் குவஹாத்தியிலிருந்து வந்தபோது கூட்டாளிகளுடன் பிடிபட்டார்.

தீவிரவாத அமைப்பு

தீவிரவாத அமைப்பு

இந்நிலையில் பிரதீப், கமல் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்காக சிறையில் இருந்து கொண்டே ரபீக் நிதி திரட்ட உதவியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்க தேச கும்பல்

வங்க தேச கும்பல்

ரபீக் தொடர்ந்து சிறையில் இருந்து கொண்டே கடந்த 3 வருடமாக கள்ள நோட்டு மற்றும் கள்ள துப்பாக்கி விற்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறையில் ஆட்களை சேர்த்து திட்டமிட்டு கடத்தலை அரங்கேற்றி வந்ததுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைக்கிறது என போலீஸார் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் ரபீக் தொடர்பு வைத்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

என்ஐஏ விசாரணை

என்ஐஏ விசாரணை

சர்வதேச அளவிலான பிரச்சனை என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விரைவில் இந்த வழக்கை கையில் எடுக்க உள்ளது. அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் குவஹாத்தி கள்ளத்துப்பாக்கி அமைப்புகள், பங்களாதேஷ் கள்ள நோட்டு அமைப்புகள் குறித்து தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

தேசத்தின் பிரச்சினை

தேசத்தின் பிரச்சினை

இதுதொடர்பாக விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கள்ளத்துப்பாக்கி தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல தேசத்தின் பிரச்சனை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை

சட்டம் ஒழுங்கு பிரச்சினை

கள்ளத்துப்பாக்கி அதிகரித்தால், மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு ஆபத்து நேரும். மேலும் சட்ட விரோத செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+