குரு பெயர்ச்சி: விஜயகாந்துக்கு ராஜயோகம்!. கருணாநிதிக்கு கஷ்டமாம்!
‘ஆடி போயி ஆவணி வந்தா என் மகன் டாப்ல வருவான்' இது ஒரு படத்தில் மகனைப் பார்த்து அம்மா சொல்லும் வசனம். காரணம் மகனுக்கு குரு பெயர்ச்சி நன்றாக இருப்பதாக ஜோசியர் சொன்னதை வைத்தே அப்படி சொல்லுவார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் அதாவது ஜூலை 5ம் தேதி குரு தற்போது இருக்கும் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார்.
இந்த ஆண்டு குரு பெயர்ச்சி மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு நன்மையும், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களையும் தரும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குரு பெயர்ச்சியால், தமிழக பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் உயரும்; சட்டம் - ஒழுங்கு சீர்திருத்தம் பெறும்; தங்கம் விலை உயரும்; ஆன்மிகத்தில் மக்களுக்கு நாட்டம் அதிகரிக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இந்த குரு பெயர்ச்சி சிம்மராசியில் ஜென்ம குருவாக இருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சுமாரான பலன்களையே தரும் என்று எற்கனவே கூறியிருந்தோம். இனி எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, ஆகியோருக்கு எத்தனைய பலனை தர இருக்கிறது பார்க்கலாம்.

கருணாநிதிக்கு கஷ்ட திசை
திமுக தலைவர் கருணாநிதிக்கு ரிஷப ராசி, மிருகசிரீஷம் நட்சத்திரம், கடக லக்னம். குரு சிம்ம ராசிக்கு இடம் பெயர்வதால், மூன்றாம் இடத்தில் இருந்து, நான்காம் இடத்திற்கு வருகிறார். அரசியல் பாதிப்புகள், அதிக அளவில் இருக்கலாம் என்கின்றனர். ‘தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படிப் போனார்' என்கிறது பாடல்.

உறவினர்களால் நெருக்கடி
நான்காம் இடத்திற்கு வரும் குரு பகவானால், உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்; ரத்த சம்பந்தமான உறவினர்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆனாலும் அவர் அணியும் மஞ்சள் துண்டு சரியான பரிகாரமாக இருக்கும் என்கின்றர் ஜோதிடர்கள்.

சட்டசபை தேர்தல்
இந்த குரு பெயர்ச்சியால் குடும்ப ஸ்தானம் சரியில்லாததால், குடும்ப உறுப்பினர்களால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். இவரது தலைமையில், பொதுத் தேர்தலை சந்தித்தால், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்துக்கு ராஜயோகம்
விஜயகாந்தின் ராசி துலாம், சித்திரை நட்சத்திரம், கும்பம் லக்னம். இதுநாள்வரை குருபகவான் 10ம் இடத்தில் இருந்து, பல தோல்விகளை தந்து கொண்டிருந்தார். வரும் ஜூலை 5முதல் குரு, 11ம் இடம் மாறுவதால், அரசியலில் புதிய வாய்ப்புகள் வர உள்ளது; அரசியலில் வெற்றிகளைக் காண்பாராம்.

தனித்து போட்டி ஆகாது
அரசியல் அரங்கில், மதிப்பு கூடும் அதே நேரத்தில் குரு பெயர்ச்சி விஜயகாந்துக்கு சாதகமாக இருந்தாலும், ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து, போட்டியிட்டால் மட்டுமே, நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

நினைத்த கூட்டணி அமையும்
விஜயகாந்த் நிதானத்துடன் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்; நினைத்தபடி கூட்டணி அமையும். எதிர்ப்புகள் வலுவிழந்து போவதால் மீண்டும் புதிய வேகத்துடன் செயல்படுவார் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகோவிற்கும் கஷ்டம்தான்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ராசி ரிஷபம், நட்சத்திரம் கார்த்திகை, லக்னம் சிம்மம். இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு குரு 4ம் இடத்திற்கு வருவதால் அரசியல் கூட்டணி அமைவதில் சற்றே இழுபறி நிலையே நீடிக்கும் நிதானமாக யோசித்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications