காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவர முயற்சியா?: போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எச். ராஜா
காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில் திமுக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.

அதிமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் இன்று மருந்து கடைகள், ஹோட்டல்கள் என கடையடைப்பு நடத்தியுள்ளன. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது.
காவிரிக்காக மக்கள் போராடி வரும் நிலையில் காவிரி நீரை பெற்று தருவோம் என்று தமிழிசையும், எச் ராஜாவும் வீரவசனம் பேசி வருகின்றனர்.
மதுரையில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் மோடி வானில் சென்றாலும் கீழே இருந்து மறிப்போம், கருப்புக் கொடி காட்டி மறிப்போம் என்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்காக கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளில் இருந்துதான் 90 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் கேட்டது.
பாஜகவுக்கு தமிழகமும், கர்நாடகமும் ஒன்றுதான். எனவே கர்நாடக தேர்தலுடன் காவிரியை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார் எச் ராஜா.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications