பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் மணிவிழா... ஈபிஸ், ஓபிஎஸ் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் மணிவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை: பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் மணி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக்க முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எச்.ராஜாவுக்கு 60 வயது எட்டியதை தொடர்ந்து அவருக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு எச். ராஜா அழைப்பிதழ்களை கொடுத்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக எம்.பி. இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணி விழா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications