For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: சர்ச்சை ஏற்படுத்திய அட்மின் நீக்கம்: எச் ராஜா விளக்கம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: எச் ராஜா விளக்கம்-வீடியோ

    டெல்லி: சிலைகளை உடைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்ச்சையை ஏற்படுத்திய அட்மினை நீக்கிவிட்டேன் என்றும் எச் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

    திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் ஒரு நாள் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்து எச் ராஜாவின் பேஸ்புக் பதிவிலிருந்து வெளியானது.

    இது திராவிடக் கட்சிகள் கொந்தளித்தன. நேற்று முதல் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

    போராட்டம்

    போராட்டம்

    இந்நிலையில் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை, மதுரை, திருவண்ணாமலை, மதுரை,சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

    பாஜக கண்டனம்

    பாஜக கண்டனம்

    எச் ராஜாவின் கருத்தை பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் போன்ற எந்த ஒரு தலைவர்களையும் இழிவுப்படுத்தும் செயலை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. மேலும் எச் ராஜாவின் பதிவால் பிரதமர் மோடியும் அதிருப்தி அடைந்துள்ளார்.

    அட்மின் பதிவு

    அட்மின் பதிவு

    இந்நிலையில் பேஸ்புக்கில் பெரியார் சிலை குறித்து வெளியிடப்பட்ட கருத்தை தான் வெளியிடவில்லை என்றும் அனுமதியின்றி அட்மினே வெளியிட்டார் என்றும் எச் ராஜா இன்று ஒரு புது பதிவை போட்டிருந்தார். மேலும் இதனால் யார் மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    எச் ராஜா பேட்டி

    எச் ராஜா பேட்டி

    தமிழகம் முழுவதும் தனக்கு எதிராக போராட்டம் வலுப்பதை அடுத்து எச் ராஜா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெரியார் குறித்த அட்மின் பதிவு ஏற்புடையது அல்ல. சென்னை- டெல்லிக்கு விமானத்தில் சென்ற போது அந்த கருத்து பதிவானது.

    அட்மினை நீக்கிவிட்டேன்

    அட்மினை நீக்கிவிட்டேன்

    இதையடுத்து டெல்லியில் லேண்டானவுடன் அந்த கருத்தை பார்த்துவிட்டு உடனே நீக்கிவிட்டேன். இதை பதிவு செய்த அட்மினையும் பணிநீக்கம் செய்து விட்டேன். சிலைகளை சேதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

    முழு நம்பிக்கை

    முழு நம்பிக்கை

    என்னுடைய அட்மின் பதிவிட்டிருந்தாலும் நான் இதயபூர்வமாக மன்னிப்பு கேட்டு விட்டேன். கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்து செல்வதில் முழு நம்பிக்கை உள்ளவன். எனவே வன்முறைகளை கைவிட வேண்டும் என்று எச் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    H. Raja explains in Delhi that He has already dismissed his facebook admin for posting controversial comment on Periyar. Though his admit posts it, he regrets for this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X