அய்யாக்கண்ணுவை தாக்கிய நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது: எச். ராஜா
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை தாக்கிய நெல்லையம்மாளுக்கு எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை திருச்செந்தூர் கோவிலில் தாக்கிய நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது கொடுப்போம் என பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் அய்யாக்கண்ணு. இது தொடர்பான பிரசுரங்களை திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் நேற்று அய்யாக்கண்ணு தமது ஆதரவாளர்களுடன் விநியோகித்தார்.

அப்போது அங்கு வந்த நெல்லையம்மாள் என்ற பாஜக பிரமுகர், இந்த அய்யாக்கண்ணுக்கு வேற வேலை இல்லை.. ப்ராடு என கூறி பிரசுரங்களை விநியோகிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.
இதில் ஆத்திரமடைந்த நெல்லையம்மாள், அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:
பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்
— H Raja (@HRajaBJP) March 9, 2018
பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்
இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications