வெள்ளக்காரி.. இத்தாலிக்காரி.. வெள்ளைத் தோள்... சோனியா குறித்த ஹெச்.ராஜாவின் கேவலப் பேச்சு இதுதான்!
சோனியார் காந்தியை வெள்ளக்காரி என்றும் இத்தாலிக்காரி என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாரீகமற்ற முறையில் பேசியுள்ளார்.
பட்டுக்கோட்டை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி, இத்தாலிக்காரி என்றும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளைத் தோளைக் கண்டால் பயப்படுறீங்க என்றும் எச்.ராஜா சாடினார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எச்.ராஜா காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகள் சோனியா காந்தியை ஏன் சந்திக்கவில்லை என்று பதிலுக்கு கேள்வி கேட்டார். மேலும் சோனியா காந்திக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட டெல்லி சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை என்று கூறினார்.

மோடியை கொச்சைப்படுத்துகின்றன
தமிழக மீடியாக்கள் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். அவர் ஒரு இந்தியர் என்பதாலேயே தமிழக ஊடகங்கள் அவரை இடது காலால் இடறுவதாகவும் எச்.ராஜா தெரிவித்தார்.

மோடியை மதிப்பதில்லை..
மேலும் இத்தாலி பெண்மணியான சோனியாவை கண்டு தமிழக மீடியாவும் தமிழக மக்களும் பயப்படுவதாகவும் அவர் கூறினார். அதேநேரத்தில் இந்தியரான பிரதமர் மோடியை மதிப்பதில்லை என்றும் எச்.ராஜா சாடினார்.

வெள்ளக்காரி சோனியா
சோனியா காந்தியை இத்தாலியன் பெண் மணி என்று கூறிய எச்.ராஜா வெள்ளைத்தோளைக் கண்டால் பயப்படுகிறீர்கள் என்றும் சாடினார். வார்த்தைக்கு வார்த்தை இத்தாலிக்காலி, வெள்ளக்காரி, வெள்ளக்காரி சோனியா என்றே எச்.ராஜா பேசினார்.

ஒருமையில் பேசிய ராஜா
எச்.ராஜா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஒருமையில் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எச்.ராஜாவின் இந்த பேச்சைக் கண்டித்து அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications