ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும், ஏன்னா.. இதுக்குத்தான் என்கிறார் எச்.ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்?- வீடியோ

  சென்னை : மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் அதிகரித்துவிட்ட நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை சுன்றடித்த வருமான வரி சோதனைக்குப் பிறகு அரசியல் களத்தில் அனலை கிளப்பி இருப்பது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட நிர்வாகத்தினருடன் நடத்திய ஆலோசனை. அரசுத் துறைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தான் அரசின் செயல்பாடும் தெரியும் என்று அதற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார்.

  இதற்கு அமைச்சர் வேலுமணியும் கோவையில் நலத்திட்ட உதவிகளைத் தான் ஆய்வு செய்தார். நலத்திட்டங்களை ஆய்வு செய்ததை எதிர்க்கட்சிகள் தேவையின்றி விமர்சனம் செய்வதாகவும் எப்போதும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

   ஏன் பதறுறீங்க?

  ஏன் பதறுறீங்க?

  இந்நிலையில் ஆளுநரின் ஆய்வை பாஜகவினர் ஆதரித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில அரசின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யவே ஆளுநர் ஆய்வு நடத்தி இருக்கிறார். இதில் எந்த மரபு மீறலும் இல்லை, அமைச்சரே இதனை ஏற்றுக்கொண்டுள்ளார், ஆனால் தமிழகத்திற்கு நல்லது நடந்துவிடுமோ என்று ஏன் இப்படி எதிர்க்கட்சியினர் பதறுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

  அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு

  இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆளுநரின் ஆய்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், மேதகு ஆளுநர் அவர்கள் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது, வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரித்துள்ளநிலையில் ஆளுநர் அவர்களின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  பிரதமர் வேலையை ஜனாதிபதி பார்க்க வேண்டும்

  எச். ராஜாவின் இந்த டுவீட் வந்ததுமே வரிந்து கட்டிக் கொண்டு பதில் போட வந்துவிட்டனர் நெட்டிசன்கள். அப்படியே பிரதமர் வேலையும், ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும் என்று தட்டிவிட்டுள்ளார் இவர்.

  குடியரசுத் தலைவரை அனுமதியுங்க

  தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்தியது தவறு இல்லை என்று சொல்கிறீர்களே உங்களுக்கு ஒரு கேள்வி என்று வம்புக்கு இழுக்கிறார் இந்த வலைபதிவர். மேதகு குடியரசு தலைவர் CBI, IT, NSA, RBI மற்றும் மத்திய அரசின் துறைகளை ஆய்வு செய்ய மோதியை அனுமதிக்க சொல்லுங்கள் ராசாஆஆஆஆ...என்று கருத்து போட்டுள்ளார் இவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP national secretary supports governor review at Coimbatore and also says that the reviews will further be increased as many corruption in central government schemes in the state.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற