எச்.ராஜா பேசிய வீடியோவை அமெரிக்கால எடிட் பண்ணிட்டாங்க.. எஸ்.வி சேகர் அடடே!
எச்.ராஜா நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய வீடியோ அமெரிக்காவில் எடிட் செய்யப்பட்டது என்று பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: எச்.ராஜா நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய வீடியோ அமெரிக்காவில் எடிட் செய்யப்பட்டது என்று பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் எச்.ராஜா வீடியோ குறித்து பாஜகவை சேர்ந்த எஸ். வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்காக நடந்த விழாவில் அவர் இப்படி பேசியுள்ளார்.
அதில், இந்த வீடியோவை எடிட் செய்துள்ளனர். இந்த வீடியோவை அமெரிக்காவில் எடிட் செய்து இருக்கிறார்கள். தேர்ந்த வல்லுநர்களை வைத்து எடிட் செய்துள்ளனர்.
இதுகுறித்து தடவியல் துறைதான் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும். இதை பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றுள்ளார்.
ஆனால் தமிழக போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை அவமதித்து எச்.ராஜா கொச்சையாக பேசிய அன்று அந்த வீடியோவை எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார். எச்.ராஜாவே அந்த வீடியோவில் பேசியது நான் கிடையாது என்று கூறி இருந்த போதும் கூட அதை பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications