சிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்
போளூர்: தமிழகத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை 24 மணிநேரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இந்து சமுதாயம் இனி எதற்கும் அனுமதி கேட்காது.. நாங்களும் பார்த்து கொள்வோம் என்று டெல்லி வன்முறைக்கு காரணமாக பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை போல பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை போளூரில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:

சி.ஏ.ஏ.எதிர்ப்பு கூட்டமைப்பு என்கிற போர்வையில் காவல்துறை அதிகாரிகள் இஸ்லாமிய முறைப்படி கொல்லப்பட்டுள்ளார்கள். கல்லால் அடித்து போலீஸை கொன்றிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கிற, அந்த நாடுகளின் சிறுபான்மையினருக்கு சில ஆயிரம் பேருக்கு குடியுரிமை கொடுப்பதற்குதான் சி.ஏ.ஏ. இதற்கு எதிராக போராட்டம் ஏன்? யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அல்ல சி.ஏ.ஏ.
இவர்களது குறிக்கோள், நோக்கம் சி.ஏ.ஏ. எதிர்ப்பு அல்ல. 1947 பிரிவினைக்கு முன்பாக தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் மலப்புரம் கலவரம், நவகாளி வன்முறை ஆகியவற்றை நாடு முழுவதும் மீண்டும் செயல்படுத்த சதிதான் இது. இது இன்றைய தினம் டெல்லியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள், கல்லும் செருப்பும் எடுத்துக் கொண்டு காவல்துறையினரை தாக்கினார்கள். டிசி விஜயகுமாரி முகத்திலே வெட்டப்பட்டார்; இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பிளேடால் கிழிக்கப்பட்டார். இவர்கள் எல்லாம் மசூதியில் அமைதியாக வழிபாடு நடத்த போனவர்களா என்ன?
திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் மீண்டும் இஸ்லாமிய மத கலவரத்தை நடத்துகிற முயற்சிதான் இந்த சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் குச்சி கூட இல்லையே? ஏன்?
இதே மாதிரி அனுமதி இல்லாமல் இந்துக்களை பிள்ளையார் வைக்க விடுவீங்களா? வேட்டையாட மாட்டீங்க? எத்தனை தடவை வேட்டையாடியிருக்கீங்க? எத்தனை தடவை என்னை மிரட்டியிருக்காங்க? உடனடியாக தமிழக அரசு, காவல்துறை எந்த இடத்திலும் அவர்களது அனுமதி இல்லாத கூட்டங்கள் நாளைக்கு இருக்கக் கூடாது; 24 மணிநேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இல்லையெனில் இந்து சமுதாயம் எதற்கும் நாங்கள் அனுமதி கேட்க மாட்டோம். நம்மளும் பார்த்துகிறது? What is there? ஆகவே முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். இவ்வாறு எச். ராஜா கூறினார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications