நல்லவேளை.... விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரலை... மு.க. ஸ்டாலின் 'நிம்மதி'
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்களது கூட்டணிக்கு வராமல் இருந்ததே நிம்மதியாக இருக்கிறது என்று திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் களத்தில் விஜயகாந்த் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் 'காமெடி டைமாக'த்தான் இருக்கிறது. விஜயகாந்த் பேசுவதென்னவோ சிறிது நேரம்தான்.. அந்த சிறிது நேரம் பேச்சும் புரிந்து கொள்ளமுடியாதவகையில் கோர்வையாக இருக்காது.

அதே நேரத்தில் பெரும் பகுதி நேரம் தொண்டர்களை ஒருமையில் திட்டுவது, நாக்கை துருத்தி அடிக்க கை ஓங்குவது என்றெல்லாம் செய்துவிட்டு நான் மனதில்பட்டதைத்தான் பேசுவேன் என வியாக்யானம் தருவது என்பது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்த் குறித்து மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
நல்ல வேளை விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையவில்லை. இப்போது தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் குறித்து வரும் செய்திகளும், விமர்சனங்களையும் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு வேளை அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருந்தால் அவரது செயல்களுக்கு எல்லாம் நாங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்திருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications