தஷ்வந்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம்
சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்று எரித்த தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

செங்கல்பட்டு: சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்று எரித்த தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளரான தஷ்வந்த் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுமியின் உடலை பெரிய பையில் அடைத்து தூக்கிச்சென்ற அவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எரித்தார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கொலைவழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதனை முன்னிட்டு சிறுமி ஹாசினியின் தந்தை பாபு தீர்ப்பை கேட்க நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
கொலையாளி தஷ்வந்தும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினியின் தந்தை பாபு தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications