தஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்... கொதிக்கும் நெட்டிசன்ஸ்

ஹாசினியை எரித்து கொன்ற போதே தூக்கில் போட்டிருக்க வேண்டும் என்று தஷ்வந்துக்கு எதிராக ட்விட்டரில் கொதிப்போடு பதிவிட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தஷ்வந்தை அப்பவே தூக்குல போட்டிருக்கணும்...கொதிக்கும் நெட்டிசன்ஸ்- வீடியோ

    சென்னை: புள்ளைய பெத்து வளர்க்கச் சொன்னா பேயை வளர்த்து வளர்த்திருக்கிறார்கள் என்று கொலையாளி தஷ்வந்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு பதிவிட்டு வருகின்றனர்.

    சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். அவரைத் தேட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

    தப்பிய தஷ்வந்த்

    தப்பிய தஷ்வந்த்

    தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வீட்டுக்கு வந்த தஷ்வந்த்

    வீட்டுக்கு வந்த தஷ்வந்த்

    இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர்களுக்கு சொந்தமான அபார்ட்மென்டில் இருக்க பிடிக்காமல் குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

    பணம் கொடுக்க மறுப்பு

    பணம் கொடுக்க மறுப்பு

    வேலையில்லாமல் இருந்த தஷ்வந்த் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    பணத்திற்காக கொலை

    பணத்திற்காக கொலை

    டிசம்பர் 2ஆம் தேதியன்றும் அப்பா வேலைக்கு போன உடன் அம்மா சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரளா மறுக்கவே, தாயை கொன்று விட்டு
    வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    தந்தையின் கவலை

    தந்தையின் கவலை

    எனது சொத்துகளை விற்றாவது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இருந்து தஷ்வந்தை மீட்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அவன் இப்படி செய்து விட்டானே என்று வருத்தப்படுகிறார் தஷ்வந்தின் தந்தை சேகர்.

    கொடூரனுக்கு தண்டனை

    சிறுமியை கொடூரமாக எரித்துக்கொன்ற தஷ்வந்த் இப்போது உல்லாச வாழ்க்கைக்கு பணம் கேட்டு தஷ்வந்த் தான் கொலை செய்திருக்கிறான். குன்றத்தூரில் குடிவந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. ஹாசினியை கொன்ற போதே கொடூரன் தஷ்வந்துக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஒழுக்கமற்ற பிள்ளை

    ஒழுக்கமா பிள்ளையை வளர்க்காததற்கான தண்டனையல்ல, அறம் மறந்த பிள்ளையின் செயலை மூடி மறைக்க துணிந்த தாய்க்கும் தந்தைக்கும் அந்த இறைவன் கொடுத்த தண்டனை! என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

    யார் மீது தவறு

    இந்த சைக்கோ கொலைகாரனுக்கு ஜாமின் தரக்கூடாதுன்னு எதிர்ப்பு வந்துச்சே கேட்டதா அரசும் நீதிமன்றமும் என்று கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+