எங்க வந்து யாரு கிட்ட... செருப்பு பிஞ்சிரும் - சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை
சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டையில் நா கூசும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டனர்.
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அணியினர் ஒருவரை ஒருவர் தாக்கி, ஆபாச வார்த்தைகளினால் அர்ச்சனை செய்து சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் அல்லாத பெண்களும் மற்றும் ஆண்களும் வந்திருந்தனர்.

ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மகளிரணி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதோடு, ஆபாச வார்த்தையில் திட்டிக்கொண்டனர். மகளிரணியினருடன் வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமானது.
சண்டைக்கு காரணம் ஹசீனாவின் படத்தை போஸ்டரில் போடவில்லை என்பதுதானாம். பெண்களின் சண்டையில் ஆண்களும் உள்ளே புகுந்ததுதான் மகளிரணி தலைவி ஜான்சிராணியின் கொந்தளிப்புக்கு காரணமாகிவிட்டது.
ஹசீனாவின் கணவரை ஜான்சிராணியும், கௌரியும் பிடிபிடியென பிடிக்க, அதற்கு ஹசீனாவின் கணவரே ஓங்கி ஓர் உதை விட்டார். ஏய் என்னடி என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்.
அதற்கு ஜான்சிராணியோ, ஏய் எங்க வந்து யாரு கிட்ட... செருப்பு பிஞ்சிரும் என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார். மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. சண்டைக்காட்சிகள் லைவ் வீடியோவாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பானது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications