இலவச ரேஷன் பொருட்களை வாங்குபவர்களா? 30 நாட்களில் ரேஷன் கார்டு ரத்தாகும் வாய்ப்பு.. உஷார்!
சென்னை: இலவச ரேஷன் பெறுவோராக இருந்தால் உங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி மிக முக்கியமான நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இருந்ததை அதிமுக ஆட்சியில் இலவச ரேஷன் அரிசி என மாறியது.
இதன் மூலம் ஏழைகள் பசியாற வழிவகை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட ரேஷன் கார்டுகள் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த ரேஷன் கார்டுகளில் போலியான முகவரியை கொடுத்து ஒருவர் பல கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் வேறு ஒரு பயனாளிக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் ஒரு சிலருக்கே கிடைத்துவிடுகிறது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி ஆதாருடன் தங்கள் ரேஷன் கார்டுகளை இணைக்க உத்தரவிட்டது.
இதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ளது. ரேஷன் கார்டையும் ஆதாரையும் இணைத்தால் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ரேஷன் கார்டு இணைக்கும் தேதி முடிவடைய இன்னும் 1 மாதம்தான் இருக்கிறது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைத்த பிறகு தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் பங்கு உணவு தானியங்கள் கிடைக்கிறதா இல்லையா என்பதை எளிதாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் அதை விரைவில் செய்து விட வேண்டும். ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. உங்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆம் தேதியாகும். உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. எனவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இலவச ரேஷன் பெற்று வரும்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் uidai.gov.in என்ற இணையத்தில் செல்லவும். அதில் Start Now என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும். இப்போது Ration Card benefit என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
அதன்பிறகு ஆதார் நம்பர், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை நிரப்பி சப்மிட் கொடுக்க வேண்டும். இது ஆன்லைன மூலம் இணைப்பது. இதே இணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது ரேஷன் கடைக்கு ஆதார் எண் நகல், ரேஷன் கார்டு நகலுடன் செல்ல வேண்டும்.
ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது என்பது வெளிப்படையான பொது விநியோக முறையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications