சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தோருக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் சேதம் அடைந்த அல்லது காணாமல் போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதில் இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு எடுத்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பாஸ்போர்ட்டுகள், விலை உயர்ந்த பொருட்களை இழந்து நிற்கிறார்கள்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
வெள்ளத்தால் உங்களின் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும். தயவு செய்து இதை ரீட்வீட் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications