வருங்கால முதல்வர், கேப்டன்னா சும்மா இல்லடா: ட்விட்டரில் டிரெண்ட் ஆன #HBDcaptain

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று #HBDCaptain(பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரின் நடிப்பு திறமையையும், அரசியலில் அவரின் துணிச்சலையும் பலர் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். இந்நிலையில் #HBDCaptain என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கேப்டனை பற்றிய சில சுவாரஸ்யமான ட்வீட்டுகள்,

குழந்தை

அரசியல் குழந்தைக்கு

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

#HBDCaptain என கவிஞன் மோக்கியா என்பவர் வாழ்த்தியுள்ளார்.

வருங்கால முதல்வர்

#HBDcaptain வருங்கால தமிழகத்தின் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என அரவிந்த் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

கேப்டன்

#HBDcaptain வானத்தை போல மனம் படைத்தவர் #வருங்கால முதல்வர். கேப்டன்னா சும்மா இல்ல டா.. என தெரிவித்துள்ளார் வினித் குமார்.

அழுக்கில்லாதவர்

தற்போதைய அரசியல் சாக்கடையில் அழுக்கில்லாதவராகத் தெரிவது கேப்டன் மட்டுமே. #HBDCaptain என வசுந்தரா காமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்

தமிழனும் தமிழனும் பாத்தாலே இங்கிலிஸ்ல பேசறான். ஆனா தாலிபன் தீவிரவாதிகிட்டயே தமிழுலதான் டா பேசுவாரு எங்க கேப்டன். #HBDcaptain என ஜாமி வாழ்த்தியுள்ளார்.

உதைப்பாரு

அப்படி ரைட் கால சுவத்துல வச்சு லெப்ட் கால்ல உதைப்பாரு பாருங்க.. #HBDCaptain என பிச்சுமணி ட்வீட் செய்துள்ளார்.

செல்லக்குழந்தை

குழந்தை மனம் கொண்ட
தமிழக மக்களின் செல்லக் குழந்தை...!!
மக்கள் அவரை ஏளனம் செய்வதிலும்
உரிமையான பாசம் இருக்கிறது.
#HBDCaptain என மருதாணி வாழ்த்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+