முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு ஜூன் 1க்கு ஒத்திவைப்பு
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி, கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு 2வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த வாரம் விடுமுறை கால நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 3வது முறையாக அக்ரி கிருஷ்ண மூர்த்தி நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ரயில்வே போலீஸாரின் விசாரணையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜாமீன் கிடைக்கும்பட்சத்தில், நான் தலைமறைவாக மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications