சிலுக்கு ஸ்மிதாவுடன் ஒப்பிட்டு பெண்ணை திட்டி, தாக்கியவர்கள் மீது வழக்கு....!

சென்னை வள்ளலார்நகரை சேர்ந்தவர் ஜோதி (நிஜப் பெயர் அல்ல). 17 வயதான இவர் தனது தந்தை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார். அதில், எங்கள் வீட்டுக்கு முன்பு கடந்த மே 30-ந் தேதி இரவு 8 மணிக்கு நின்றுகொண்டிருந்தேன். அப்போது அப்பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் தேவா என்னை பார்த்து, சிலுக்கு ஸ்மிதா போல நிற்கிறாள் என்று அவதூறாக பேசினார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில், தேவா, அவரது சகோதரர் சார்லஸ், சகோதரி திவ்யா, குமார் ஆகியோர் என்னை அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, எட்டி உதைத்து தாக்கினார்கள். இதுகுறித்து பழைய வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் உடனே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லலிதாகுமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் புகார் மனு மீது விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பழைய வண்ணார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications