இவர் தான் ஒரே ஒரு சூப்பர் ஹீரோவா?:
அந்தக் கருத்தினைத்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்தத் தீர்ப்பு இங்கேயுள்ள பெரும்பான்மையான ஏடுகளில் விரிவாக வெளியிடப்படாவிட்டாலும் "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, முதல் பக்கத்திலேயே "முன்னாள் நீதிபதி, ஒரு சூப்பர் ஹீரோவா? பல விசாரணைக் குழுக்களுக்கு எதற்காக ஒரே நபர்?" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

"ஒரே நேரத்தில் பல உணர்ச்சிகரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய அளவுக்கு இவர் ஒருவர் தான் பொருத்தமானவரா? இவர் தான் ஒரே ஒரு சூப்பர் ஹீரோவா? சென்னை உயர் நீதிமன்றம், திங்கட்கிழமை அன்று, "எவ்வாறு முன்னாள் நீதிபதி ஆர். ரகுபதி அவர்கள் ஏற்கனவே அவர் பல விசாரணைக் குழுக்களில், அதாவது தலைமைச் செயலகம் பற்றிய விசாரணைக் குழுவிலும், தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராகவும், குண்டர் தடுப்புச் சட்ட மாநில ஆலோசனை வாரியத்தின் உறுப்பின ராகவும் இருக்கின்ற நிலையில் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்த சம்பவம் பற்றிய விசாரணைக்காகவும் நியமிக்கப்பட்டார் என்று வியப்போடு கேட்டார்" என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி அவர்களை இந்த விசாரணைக் கமிஷன் நீதிபதியாக நியமித்தபோதே, நான் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். தமிழக அரசு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வே இத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசின் பதில் என்ன? இதே கேள்வியை திமு கழக அரசு இருந்த போது ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார்? "24 மணி நேரத்திற்குள் "மைனாரிட்டி" அரசு பதவி விலக வேண்டும்" என்று அறிக்கை கொடுத்திருப்பாரா இல்லையா? இன்றைக்கு என்ன செய்யப் போகிறார்? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications