பணிப்பெண்கள் புகார்.. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்
மார்ச் 17ம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து, நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
மதுரை: சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை வரும் 17ம் தேதிவரை கைது செய்ய மதுரை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து்ள்ளது.
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது வீட்டில் வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம், ஆனைகுடியை சேர்ந்த பானுமதி, தங்கை ஜான்சிராணி ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர். இந்த புகாரை திரும்ப பெறுவதாக இருவரும், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மனு அனுப்பினர். இதற்கிடையே பானுமதி கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

புகாரை திரும்ப பெற சசிகலா புஷ்பா தரப்பில் மிரட்டப்பட்டதாகவும் பானுமதி புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் தரப்பில் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 17ம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து, நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications