ஆழ்துளை கிணறு தோண்ட விதிமுறை: மத்திய, மாநில அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பான விதிகளை உறுதியாக பின்பற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் தனசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 2009ல் ஆழ்துளை கிணறு அமைப்பது பற்றி உச்ச நீதிமன்றம் விதிகள் வகுத்தது என்றும், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என கலெக்டர்கள் அறிக்கை தர உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications