மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மாற்றுப்பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அரசுத்துறையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளர்கள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர்களுக்கு பணி வழங்காவிட்டால் ஏற்கனவே தந்த ஊதியத்தை தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications