ராமநாதபுரம்: போலீசார் மீது தாக்குதல் நடத்திய 1,011 பேர் மீது வழக்குப் பதிவு!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 1,011 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம் போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை அவ்வமைப்பினர் கடைப்பிடித்தனர்.
‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்' என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தப்பட்டன.
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அணிவகுப்பு மற்றும் பேரணி நடைபெற்றது.
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையான அனுமதி பெற்று பேரணியை தொடங்கியதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
அனுமதி மறுப்பு
பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் அந்த அமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை 4 மணியளவில் குமரையா கோயில் பகுதியில் இருந்து சீருடை அணிவகுப்பு நடத்த முயன்றனர் என்றும் இதை தடுக்க போலீசார் முயன்றனர் என்றும் கூறப்படுகிறது.
கடும் மோதல் தடியடி
அப்போது, போலீசாருக்கும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்த துவங்கினர். இதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன் போலீஸார் மீது எதிர் தாக்குதல் நடத்தினர்.
பலத்த காயங்கள்
இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். போலீசார் தாக்கியதில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்டவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து, வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸார் ராமநாதபுரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், ராமநாதபுரம் டி.ஜ.ஜி. (பொறுப்பு) ஆனந்தசோமானி உள்ளிட்டோர் ராமநாதபுரத்திற்கு இரவோடு இரவாக வந்தனர். தொடர்ந்து ஏராளமான போலீஸார் ராமநாதபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பதற்றம் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.
1011 மீது வழக்கு
இந்நிலையில், 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 1,011 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு உத்தரவு
இதனிடையே போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.முகம்மது அப்பாஸ் தொடர்ந்த பொதுநல வழக்கினை ஏற்ற உயர்நீதிமன்றக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications