நடராஜனின் பெரிய மனசு.. “என்னைவிட திறமை!” தமிழக கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை - யார் இந்த கௌதம்?
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தான் நடத்தி வரும் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று டிஎன்பிஎலில் மதுரை அணிக்காக விளையாடி வரும் கௌதம் என்ற வீரர் தன்னைவிட நல்ல திறமையானவர் என்று மனதார தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் அகாடமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசி உள்ளார்.
யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் யூடியூப் சேனலில் நடராஜனை பேட்டி எடுத்து இருக்கிறார். அப்போது டிஎன்பிஎல், ஐபிஎலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது, இந்திய அணிக்காக விளையாடிய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

இதில் நடராஜன் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி குறித்து அருண் கார்த்திக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடராஜன், "நான் 12 ஆம் வகுப்பு படித்த நேரத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியபோதே, என் அண்ணன் கிரிக்கெட் அகாடமி தொடங்கி பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதை நினைத்து அவர் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. 2016ல் ஐபிஎல் ஆடியபோதே அகாடமியை தொடங்கிவிட்டோம்.
அப்போது சிறிய அளவில் தொடங்கினோம். உள்ளூரிலிருந்து பலர் வந்தார்கள். வெளியீரில் இருந்தும் கேட்டு வருவார்கள். இங்கு தங்கி கஷ்டப்பட வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் தெரியாது. எனவே சேலத்துக்கு அருகில் உள்ளவர்களை வைத்து பயிற்சி கொடுக்க தொடங்கினோம். என் அண்ணன் தடகளம், கபடிக்கு பயிற்சியளிக்கிறார். நன்றாக படிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்.

எங்களை பார்த்து அருகருகே உள்ள ஊர்களிலும் இதேபோல் செய்கிறார்கள். இது பெரிய விசயம். அந்த வகையில் என் அண்ணனுக்கு ரொம்ப சந்தோசம்." என்றார். அப்போது அருண் கார்த்திக், "எங்கள் மதுரை அணியில் கௌதம் என்ற வீரர் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவர் உன்னை விட திறமையானவன் என்று நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறேன்." என்றார்.
இதை கேட்ட நடராஜன் எந்த தயக்கமும் காட்டாமல், "நானும் ஒத்துக்கொள்கிறேன். அதை நான் இல்லை என்று சொல்லவே இல்லை. என்னை விட அவர் அதிக திறமையானவர். உங்களிடம் நான் அப்போதே சொல்லி இருக்கிறேன். என்னைவிட அவருக்கு 2 மடங்கு திறமை உள்ளது. ஏனென்றால் அவர் பேட்டிங்கும் விளையாடுகிறார். என்னை போன்று அடுத்து அவர் தான் வருவார் என்று நினைக்கிறேன்." என்றார்.
அப்போது அருண் கார்த்திக், "கௌதமை எடுக்கும்போது உங்களுகுதான் முதலில் நான் போன் செய்தேன். அவர் வேற லெவலில் பால் போடுவார் என்று நீங்கள் சொன்னீர்கள். அந்த மனசுதான் உங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது." என்று சொல்ல, நடராஜன், "என்னை விட நன்றாக பந்துவீசினால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.
உடனே அருண் கார்த்திக், "அவரை மட்டுமல்ல. இவரை எடுத்துக்கொள்ளுங்கள், அவரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பலருக்கு உதவுகிறீர்கள்." என்றார். இதை கேட்ட நடராஜன், "எப்போதும் ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா? அவர்களுக்காக யார் போய் பேசுவது? அவர்களுக்கு என்னவென்று தெரியாது. இப்போது நான் வந்திருக்கிறேன். எனக்கு தெரிகிறது. உங்களை போன்ற 4 பேர் உதவி செய்கிறீர்கள்.

அவர்களிடம் நான் விளையாட வையுங்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்களிடம் திறமை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். இங்கிருந்து சென்ற எல்லோருமே நன்றாக விளையாடி இருக்கிறார்கள். பெரியசாமி வந்தார். கௌதம் வந்துள்ளார். அரவிந்த் வந்துள்ளார். இன்னும் அப்படியே வருவார்கள். ஒரு சிறிய வழிகாட்டிதான்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications