Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் சரத்பாபு.. உடம்பெல்லாம் விஷம்.. அதென்ன செப்சிஸ்.. இத்தனை ஆபத்தான தொற்றா.. பாருங்களேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுசு புதுசாக வைரஸ்களும், நோய்களும் பரவி, மனித குலத்தை தாக்கி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில் நடிகர் சரத்பாபுவையும் ஆபத்தான தொற்று ஒன்று தாக்கி உள்ளது..!!

நிழல் நிஜமாகிறது படத்தில் ஆரம்பித்து, முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

நடிகை ஷோபா : மிகச்சிறந்த நடிகர்.. இயல்பான நடிப்பு, சுண்டியிழுக்கும் குரலால் தமிழக மக்களை தன்வசம் சேர்த்து கொண்டவர்.. முள்ளும் மலரும் படத்தில் ஜீப்பில் ஷோபாவை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் 'செந்தாழம் பூவில்' பாட்டைப் பாடிக் கொண்டே ஜீப் ஓட்டும் காட்சியாகட்டும், "அடேய் நண்பா" என்று அண்ணாமலை படத்தில் ரஜினி பாடும்போதெல்லாம் கண்முன் நிற்பது சரத்பாபுவின் உருவம்தான்.

Health: Famous Actor Sarath babu health condition and what are the sepsis symptoms: Major infections

இப்போது 71 வயதாகிறது.. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பெங்களூருக்கு சென்றிருக்கிறார்.. அங்கு திடீரென உடம்புசரியில்லாமல் போய்விடவும், அங்குள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்... தீவிர சிகிச்சை தரப்பட்டு, கொஞ்சம் தேறினார். ஆனால், மறுபடியும் உடல்நலம் கெட்டுள்ளது.. உடல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், விஷம் ஏறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. செப்சிஸ் என்ற நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

செப்சிஸ்: அதென்ன செப்சிஸ் நோய்? இதன் அறிகுறிகள் என்ன? செப்சிஸ் என்கிற செப்டிசீமியா என்கிறார்கள்.. இது ஒரு தொற்று.. ஆனால், ஆபத்தான தொற்று.. உடனே மருத்துவம் தரவேண்டிய அளவுக்கு மோசமான தொற்று.. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்வைகளால் தொற்று ஏற்படலாம்.. வழக்கமாக, எந்த தொற்று ஏற்பட்டாலும், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திதொற்றை அழித்துவிடும்.. சாதாரண தொற்று என்றால், வழக்கமான சிகிச்சையும், நிறைய தண்ணீர் குடித்தாலே போதும்..

Health: Famous Actor Sarath babu health condition and what are the sepsis symptoms: Major infections

அதிக வீரியம்: ஆனால், வீரியம் அதிகமாக இருக்கக்கூடிய தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.. பிறகு, நமது உடலில் எந்த உறுப்பில் தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அதன் பொருட்டு அறிகுறிகள் மாறுபடும்... உதாரணமாக ஃபுட் பாய்சன் சம்பந்தமான தொற்று ஏற்பட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும்... அதுவே நுரையீரலில் தொற்று ஏற்பட்டால், இருமல், சளி அல்லது பச்சை, மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

வீர்யம் அதிகமாக இருக்கக்கூடிய தொற்றானது, ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாது.. இறுதியில், தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படைய செய்துவிடும். உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது 2 சிறுநீரகங்களையும் பாதிப்பை தருவதுடன் இதயத்திலும் பாதிப்பை தந்துவிடும்.. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.. நுரையீரலையும் பாதிக்கும். இதைதான் ARDS (Acute Respiratory Distress Syndrome) என்பார்கள்.

கடுமையான தொற்று: இப்படி கடுமையான தொற்று ஏற்பட்டு, பல உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதித்து, கடைசியில் நோயாளி சுயநினைவையே இழக்கும் நிலைமையும் ஏற்படும். அதாவது, ஒரு உறுப்பு பாதிப்படைந்து, மற்ற உறுப்புகளையும் பாதிப்பதற்கு பெயர்தான், செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்கிறார்கள்.. உயிருக்கே ஆபத்தான இந்த செப்சிஸ் தாக்கிவிட்டால், ஏராளமான சிகிச்சை முறைகள் செய்ய வேண்டுமாம்..

Health: Famous Actor Sarath babu health condition and what are the sepsis symptoms: Major infections

ஆனால், உதாரணமாக, கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி போன்ற தெரபி செய்தால், அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு குறைவாகவே இருக்கும்... இந்த நேரத்தில், ஏதாவது தொற்று அவரை பாதித்தால், அவரையும் செப்சிஸ் தாக்கிவிடும். சுருக்கமாக சொன்னால், எந்த சிகிச்சையால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அந்த நேரத்தில், இந்த தொற்று ஏற்படக்கூடும். வயதான சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.
தாமதமான சிகிச்சை: தாமதமான சிகிச்சையும் செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும்... அந்த தொற்று ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள உறுப்புகளையும் பாதித்து, தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது, அந்த தொற்றை எந்த மருந்துகளாலும் அழிக்க முடியாது. இந்த செப்சிஸ் என்பது பரவும் நோய் கிடையாது.. ஆனால் அதன் தொற்று பரவுமாம்.. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து, சத்தான உணவுகளையும் முறையான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே அவரை எந்த தொற்றும் அண்டாது என்கிறார்கள் டாக்டர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+